மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த உதவி செய்கிறது மாநகராட்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:45

ராயபுரம் : ராயபுரம் மண்டலத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத வீடுகளில், 3,500 ரூபாய் செலவில் கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி உதவி செய்து வருகிறது.



சென்னை மாநகராட்சியின், ஒவ்வொரு வார்டிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்யவும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டடங்களில், புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், மாநகராட்சி சார்பில், குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில், மாநகராட்சி உதவி பொறியாளர், குடிநீர் வாரிய உதவி பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் உள்ளனர்



ராயபுரம் மண்டலத்தில், 49 - 63 வார்டு வரை, 15 வார்டுகள் உள்ளன. இதில், 29 ஆயிரத்து, 815 கட்டடங்கள் உள்ளன. இதுவரை, 5,941 கட்டடங்கள், இக்குழுவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில், 581 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.5,360 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை; அதில், 900 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு வசதிகள் செய்ய, இடவசதி உள்ளது.



அப்பகுதி மக்களிடம், துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, மாநகராட்சியினர், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மேலும், 900 கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது..இது குறித்து, மண்டல செயற்பொறியாளர், சொக்கலிங்கம் கூறியதாவது:



ராயபுரம் மண்டலம் முழுவதும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இடவசதி உள்ள கட்டடங்களில், நிலத்தின் தன்மைக்கேற்ப, 3,500 - 5,500 - 8,000 ரூபாய் என, மூன்று வகையாக, பொதுமக்களுக்கு குறைந்த செலவில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படும்.இதற்கான திட்டம் குறித்து விளக்குவ தோடு, கட்டமைப்பு ஏற் படுத்துவோரை அடையாளப் படுத்தி, அவர்களிடம் தொடர்பு ஏற்படுத்துகிறோம்.பொதுமக்கள், இதை பயன்படுத்தி, வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X