| துாத்துக்குடியில் பலத்த காற்று விமானம் மதுரையில் இறக்கம் Dinamalar
துாத்துக்குடியில் பலத்த காற்று விமானம் மதுரையில் இறக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:46

அவனியாபுரம் : நேற்று காலை துாத்துக்குடியில் இறங்க வேண்டிய இண்டிகோ விமானம், பலத்த காற்று காரணமாக மதுரைக்கு திருப்பிவிடப்பட்டு தரை இறக்கப்பட்டது.



சென்னையிலிருந்து 74 பயணிகளுடன் விமானம், நேற்று காலை 11:00 மணிக்கு துாத்துக்குடிக்கு சென்றது. அங்கு பலத்த காற்று வீசியதால் விமானத்தை தரை இறக்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் விமானம் மதுரைக்கு திருப்பி விடப்பட்டது.மதுரையில் மூன்று மணிநேரம் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர்.



பின் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமான நிறுவனம் சார்பில், துாத்துக்குடிக்கு கார் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று, இண்டிகோ விமானம் துாத்துக்குடியில் தரை இறக்க முடியாமல் மதுரையில் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X