அரசு டாக்டர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
00:48

மதுரை : அரசு டாக்டர்களை வேறு எந்த காரணம் மற்றும் மாற்றுப் பணிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்க அரசு கொள்கை முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.



மதுரை தபால்தந்தி நகர் அலெக்சாண்டர் தேவராஜ். இவரது மனைவி டாக்டர் லில்லி மனோகரன். இவர் 1973 ல் அரசு உதவி டாக்டராக பணியில் சேர்ந்தார். 1994 ல் 'சிவில் சர்ஜன்' டாக்டராக பதவி உயர்வு பெற்றார். லில்லி மனோகரனை வெளிநாட்டு மருத்துவப் பணிக்காக குவைத் செல்ல 1992 ல் சுகாதாரத்துறை அனுமதித்தது. இவர் மீண்டும் தாயகம் திரும்பி 1996 செப்.,24 ல் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. 1997ல் தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவர் 2002 ல் இந்தியா வந்தார். 2003 ல் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரியில் உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.




2004ல் பணி ஓய்வு பெறுவதற்கு முன், லில்லி மனோகரனை அரசு சஸ்பெண்ட் செய்தது. பணி ஓய்வு ஓய்வு பெற அனுமதிக்கவில்லை. 2005ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து தாக்கல் செய்த சீராய்வு மனுவை சுகாதாரத்துறை செயலாளர் 2013 ல் நிராகரித்தார். இதை ரத்து செய்து மனைவிக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி அலெக்சாண்டர் தேவராஜ் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவு: மனுதாரரின் மனைவி அனுமதிக்கப்பட்ட காலவரம்பைவிட, கூடுதலாக வெளிநாட்டில் இருந்துள்ளார். துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் இருந்த காலத்தில் பணியில் சேர அனுமதித்தது வியப்பளிக்கிறது.




அரசுத் தரப்பில் மனுதாரர் மனைவியை பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்ததில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயலற்ற தன்மையை இது காட்டுகிறது. இது போன்ற காலதாமதம் மற்றும் கவனக்குறைவு வரும்காலங்களில் அனைத்து அரசுத்துறைகளிலும் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். இதில் கடமை தவறும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.



டாக்டர் தொழில் உயர்வானது. இந்தியாவில் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. அரசுப் பணியில் உள்ள டாக்டர்களை வேறு எந்த காரணம் மற்றும் மாற்றுப் பணிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தவிர்க்க அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல. மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X