வாகனங்களில் பேட்டரி திருட்டு தொடர்வதால் பாதுகாப்பு விழிப்புணர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
01:45

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், லாரி, சரக்கு வாகனங்களில், 'பேட்டரி' திருட்டு தொடர்ந்து அரங்கேறுகிறது. ஆனால், கைவரிசை காட்டும் ஆசாமிகள் போலீஸ் பிடியில் சிக்காமல் உள்ளனர். இதனால், குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் சன்மானம் தருவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நுாதன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.


பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, ஏராளமான தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. தினமும், நார் பொருட்கள், காய்கறிகள், இறைச்சிக்கான மாடுகள், லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.விளைபொருட்கள், தென்னை மட்டைகள் உள்ளிட்டவை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில், 2,200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் இயங்குகின்றன.இந்த வாகனங்களை இரவு நேரங்களில், வீடுகளிலும், லாரி பேட்டைகளிலும், ரோட்டோரங்களிலும், டிரைவர்கள் நிறுத்துகின்றனர். இந்நிலையில், வாகனங்களில், கடந்த சில மாதங்களாக 'பேட்டரி', 'ஜாக்கி', 'தார்பாலின்' போன்றவற்றை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். இவற்றை பழைய இருப்பு கடைகள், 'பேட்டரி' கடைகளில் விற்பனை செய்கின்றனர்.கடந்த, 6ம் தேதி பூச்சனாரி அருகே, இரண்டு லாரிகளிலும், கடந்த மாதம் மீனாட்சிபுரம் அருகே ஒரு லாரியில் பேட்டரி திருடப்பட்டது. இதுபோல, கடந்த இரண்டு மாதங்களில் ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ஐந்து திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.


இதனால், லாரி, சரக்கு வாகன உரிமையாளர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். பல திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்தாலும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், 'லாரி, சரக்கு வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, 'கிளீனரை' வாகனத்தின் அருகிலேயே இருக்கச் செய்ய வேண்டும்,' என பொள்ளாச்சி லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.மேலும், திருட்டு சம்பவங்கள் குறித்து தகவல் தெரிவித்தாலோ, திருடர்களை பிடித்து ஒப்படைத்தாலோ சன்மானம் தருவதாக, பொது இடங்களில் நோட்டீஸ் ஒட்டி, 'வாட்ஸ்ஆப்'ல் விழிப்புணர்வு நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.40 வாகனங்களில் மர்மகும்பல் கைவரிசை!பொள்ளாச்சி தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சேனாதிபதி கூறியதாவது:கடந்த, மூன்று மாதங்களில், பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 40 வாகனங்களில் 'பேட்டரி', 'ஜாக்கி' உள்ளிட்டவை திருடப்பட்டு உள்ளது. கடந்த வாரம், மீனாட்சிபுரம், தொழிற்பேட்டை, கோட்டாம்பட்டி பகுதிகளில், லாரியில் 'பேட்டரிகள்' திருடப்பட்டது.ஒரு 'பேட்டரி' விலை, 13 ஆயிரம் ரூபாய், 'ஜாக்கி' மூன்றாயிரம் ரூபாய். திருடர்கள் 'பேட்டரி'யை நான்காயிரம் ரூபாய்க்கும், 'ஜாக்கியை' ஆயிரம் ரூபாய்க்கும் பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்கின்றனர்.


பழைய 'பேட்டரி', 'ஜாக்கி' விற்பனை செய்தால், தகவல் தெரிவிக்கும் படி கடைக்காரர்களுக்கு தெரிவித்து உள்ளோம். கேமரா இருக்கும் இடங்களில் லாரி, சரக்கு வாகனங்களை நிறுத்துமாறு போலீசார் கூறுகின்றனர். ஆனால், இரவு நேரங்களில் திருடப்பட்டால் வீடியோ காட்சிகளை வைத்து கண்டறிய இயலாத நிலை நீடிக்கிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க நோட்டீஸ் ஒட்டி வருகிறோம். லாரி, சரக்கு வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X