| ஒன்றிய அலுவலகம் குடிநீருக்காக முற்றுகை Dinamalar
ஒன்றிய அலுவலகம் குடிநீருக்காக முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
02:00

அன்னுார்:குடிநீர் கோரி, கரியாக்கவுண்டனுார் மக்கள் அன்னுார் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கரியாக்கவுண்டனுார் பொதுமக்கள் நேற்று மதியம் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். துணை பி.டி.ஓ., பீர் முகமதுவிடம் மனு கொடுத்து மக்கள் கூறுகையில்,' பவானி ஆற்று நீர், 15 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. போர்வெல் நீரை வைத்து சமாளித்து வந்தோம். இப்போது போர்வெல் நீரும் குறைந்து விட்டது. 500 குடும்பங்களுக்கும் சேர்ந்து ஒரு போர்வெல் மட்டும் இயங்கி வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று குடம் தான் கிடைக்கிறது. கூட்டுறவு சங்கம் அருகில், அப்பாஜி நகரில், குளத்தில் என மூன்று இடங்களில் போர்வெல்கள் உள்ளன. ஆனால் அவற்றில் உள்ள மோட்டார் இயங்காமல் முடங்கி கிடக்கிறது. விரைவில் அவற்றை சரி செய்து தட்டுப்பாடில்லாமல் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்,' என்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக பீர் முகமது உறுதி அளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X