அன்னுார்:அன்னுார் மேட்டுப்பாளையம் ரோட்டில், 119 ஏக்கர் பரப்பள்ளவுள்ள குளம் உள்ளது. பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த குளத்தில், நுாற்றுக்கணக்கான டன் குப்பைகள் குவிந்துள்ளன. கால்நடை கழிவுகள், கழிவு நீர் தேக்கம் என குளம் மாசடைந்துள்ளது.குளத்திலுள்ள குப்பைகளை அகற்றி, மழை நீர் வரும் பாதையை பராமரித்து, கரைகளை பலப்படுத்த பல தன்னார்வலர்கள் முன் வந்துள்ளனர். இதற்காக அன்னுார் குளம் நீர் மேலாண்மை இயக்கம் துவக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 10:00 மணிக்கு சரவணா லாட்ஜில் நடக்கிறது. இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்கின்றனர்.'ஆர்வமுள்ளவர்கள் கூட்டத்தில் பங்கேற்று, குளத்தை மீட்க உதவ வேண்டும்' என ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.