கோவில்பாளையம்:கவையன்புத்துார் தமிழ்ச்சங்கம் சார்பில், மாதாந்திர இலக்கிய நிகழ்வு விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில் நடந்தது. சங்க செயலாளர் கணேசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மாரப்பன், பழமன் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.புலவர் சூரிய நாராயணன் பேசுகையில்,'' பொருட்களில் கலப்படம் செய்தால் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் மொழியில் கலப்படம் செய்தால் கண்டுகொள்வதில்லை. பேசும்போது பிறமொழி கலப்பு அதிகமாக உள்ளது. தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.எழுத்தாளர் வள்ளியப்பன் பேசுகையில்,''தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் உணர்வு குறைந்து விட்டது. மொழி ஆர்வம் இளைய தலைமுறையிடம் இல்லை,'' என்றார்.கந்தசாமி நன்றி தெரிவித்தார்.