அன்னுார்:அன்னுார், சிறுமுகை சாலை, கைகாட்டி நகரில், கருப்பராயசாமி கோவில் அருள்வாக்கு சொல்வதில் பிரசித்தி பெற்றது. ஐந்தாம் ஆண்டு தேர்த் திருவிழா நேற்று துவங்கியது. பக்தர்கள் கரகம் எடுத்தபடி கோவிலுக்கு வந்தனர். இன்று, பொங்கல் வைத்து, சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை 11:30 மணிக்கு, தேரோட்டம் துவங்கி, மதியம் 1:00 மணிக்கு, 108 கிடாய் வெட்டி விருந்து பரிமாறப்படுகிறது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலிலிருந்து, கருப்பராயர் கோவிலுக்கு 21ம் தேதி காலை முதல் மாலை வரை இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.