| ரோடு விரிவாக்கத்தில் பாதுகாப்பில்லை: அலட்சியம் காட்டுவதால் சேதம் அதிகம் Dinamalar
ரோடு விரிவாக்கத்தில் பாதுகாப்பில்லை: அலட்சியம் காட்டுவதால் சேதம் அதிகம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
22:47

பொள்ளாச்சி:பொள்ளாச்சியை அடுத்து இரு மாநில இணைப்பு நெடுஞ்சாலையில், அலட்சியமாக மேற்கொள்ளப்படும் விரிவாக்க பணியால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உட்பட்டு, தமிழகம் -- கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய ரோடுகளில் வாகன போக்குவரத்து பெருகி வருகிறது.இந்த ரோடுகளில், கேரளா மற்றும் கேரள வழித்தடத்தில் கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன.இதனால், வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.


அதற்கேற்ப, ரோடுகள் விரிவுபடுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.மாநில நெடுஞ்சாலை துறை வசமுள்ள ரோடுகளை, தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இரு மாநில இணைப்பு மாநில நெடுஞ்சாலைகளை விரிவாக்க, மத்திய அரசு நிதி ஒதுக்கியது. குறிப்பிட்ட ரோடுகளை, தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் விரிவுபடுத்தி, மேம்படுத்தி கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.முதல்கட்டமாக, பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, வடக்கிபாளையம் ரோட்டை நடுப்புணி வரையிலான, 17.4 கி.மீ., தொலைவுக்கு மூன்று வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த பிப்., மாதம் பூமி பூஜையுடன் துவங்கப்பட்ட பணியில், ஏழு மீட்டர் அகலமுள்ள நடுப்புணி ரோடு, மத்திய சாலை நிதி மூலம், 10.5 மீட்டருள்ள மூன்று வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது.


இப்பணியின் திட்ட மதிப்பு, 22.5 கோடி ரூபாய் ஆகும்.விரிவாக்க பணிக்காக ரோட்டின் ஒரு பக்கம், இரண்டு முதல் மூன்றடி ஆழத்துக்கு குழி தோண்டப்படுகிறது. பணியின் போது, ரோட்டோரம் பதிக்கப்பட்டுள்ள பிரதான குடிநீர் குழாய்கள் உடைகின்றன.உடைக்கப்படும் குழாய்களை, சீரமைக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால், பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.


பணி நடக்கும் இடத்தில், பாதுகாப்பு தடுப்புகள், எச்சரிக்கை அறிவிப்புகள், இரவில் ஒளிரும் அபாய அறிவிப்புகள் என எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை.இதனால், விரிவாக்க பணி நடக்கும் ரோட்டில் விபத்து அபாயமும் நிலவுகிறது. துறை அதிகாரிகள், மக்களை பாதிக்காத வகையில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரரை அறிவுறுத்த வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X