| கம்போடியா பள்ளிகளில் பாடமாக திருக்குறள் Dinamalar
கம்போடியா பள்ளிகளில் பாடமாக திருக்குறள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
01:44

நோம்பென்:கம்போடியா பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடாமாக திருக்குறள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.


ஜூன் மாதம் கம்போடிய அரசு உயரதிகாரிகள், பல்லவ மன்னர்களுக்கும், கம்போடிய மன்னர்களுக்கும் இடையே இருந்த அரசியல் மற்றும் கலாசார உறவு குறித்து அறிய தமிழகம் வந்தனர். அவர்கள் பல்லவ, கம்போடிய மன்னர்களுக்கிடையே இருந்த நட்புக்கான பல சான்றுகளை பார்த்து சென்றனர்.இதையடுத்து சோழ மன்னன் முதலாம் ராஜேந்திர சோழனுக்கும், கம்போடியாவின் கெமர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சூர்யவர்மனுக்குமான நட்பை தெரிவிக்கும் வகையில் இருவருக்கும் ரூ.25 கோடியில் கம்போடியாவில் சிலைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.


மேலும் தமிழ்நாட்டுக்கும் கம்போடியாவிற்கும் உறவை வலுப்படுத்தும் வகையில், திருக்குறளை கம்போடிய அரசு அந்நாட்டின் பள்ளிகளில் பாடப்புத்தகத்தில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது. திருக்குறளை கம்போடியர்களும் கற்கவுள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X