| தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல் Dinamalar
தறிகெட்டு ஓடிய தனியார் பஸ் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
01:44

புதுச்சேரி:முதலியார்பேட்டையில் தாறுமாறாக ஓடி, அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய தனியார் பஸ்சை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.புதுச்சேரியில் இருந்து நேற்று இரவு 7:30 மணிக்கு பிஒய்-01-ஏபி-2939-பதிவெண் கொண்ட தனியார் பஸ் பாகூருக்கு புறப்பட்டது. பஸ்சை ஏம்பலத்தை சேர்ந்த அருள், 28; ஓட்டி சென்றார். முதலியார்பேட்டை ரயில்வே கேட்டை கடந்த பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.


அதனைக் கண்ட மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.இருப்பினும் பஸ் முன்னாள் சென்ற ஸ்கூட்டர், டாடா ஏஸ் மற்றும் எதிரே புதுச்சேரி நோக்கி வந்த கார் மீது மோதி, சுதேசி பஞ்சாலை எதிரில் உள்ள தடுப்புகட்டையில் மோதி நின்றது.


இதனை கண்டு ஆவேசமடைந்த பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய பஸ்சின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதோடு, டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த முதலியார்பேட்டை போலீசார் விரைந்து வந்து, பொதுமக்களிடம் சிக்கிய டிரைவரை மீட்டு, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பின்னர். மக்கள் கூட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீரமைத்தனர்.விபத்தில் காயமடைந்த ௮ பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.


ஆக்கிரமிப்பால் விபத்துபுதுச்சேரி - கடலுார் சாலையில் முதலியார்பேட்டையில் சாலையின் இருபுறமும் கழிவு நீர் வண்டிகள் நிறத்தியும், நடைபாதை கடை அமைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை குறுகலாகி உள்ளதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சில வாரங்களுக்கு முன் இதே சாலையில் நடந்த விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் இறந்தார். அதன்பிறகும், இச்சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. இனியேனும், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X