| சமூக பாதுகாப்பு திட்டத்தில் 16 குடும்பங்களுக்கு நிதியுதவி Dinamalar
சமூக பாதுகாப்பு திட்டத்தில் 16 குடும்பங்களுக்கு நிதியுதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
01:45

புதுச்சேரி:லாஸ்பேட்டை தொகுதியில் குடும்ப தலைவரை இழந்த 16 குடும்பங்களுக்கு, சமூக பாதுகாப்பு திட்ட நிதியை சபாநாயகர் வழங்கினார்.லாஸ்பேட்டை தொகுதியில், குடும்ப தலைவரை இழந்த குடும்பத்தினருக்கு, வருவாய்துறை மூலம் வழங்கப்படும், ராஜிவ்காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,15 குடும்பங்களுக்கு, தலா ரூ. 30 ஆயிரம் வீதம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரமும், ஒரு குடும்பத்திற்கு ரூ. 75 ஆயிரம் பெறுவதற்கான நிதியுதவி ஆணையினை சபாநாயகர் சிவக்கொழுந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X