தனியார் சிட் பண்ட் நிறுவனம் மோசடி: கமிஷனர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
02:08

கோவை:தனியார் சிட் பண்ட் நிறுவனம், பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நகை, நிலம், சிறு சேமிப்பு சீட்டுகள் மூலம் தனியார் நிறுவனம் பண மோசடி செய்து விட்டதாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலை, 70க்கும் மேற்பட்டோர் புகார் தெரிவிக்க வந்தனர்.


அவர்கள் கூறியதாவது:காந்திபுரம், 100 அடி ரோட்டில் செயல்பட்ட நிறுவனத்தில் தங்க நகைச்சீட்டு, சிறு சேமிப்பு, நிலச்சீட்டு ஆகியவற்றில் முதலீடு செய்தோம். சிறு சேமிப்பு சீட்டில், மாதம் ஆயிரம் ரூபாய் வீதம், 24 மாதங்களுக்கு பணம் வசூலிக்கப்பட்டு, முதிர்வு தொகையாக வட்டியுடன் ரூ.32 ஆயிரம் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது; 250க்கும் மேற்பட்டோர் இணைந்தோம்.இதேபோல், 48 மாதம் நிலச்சீட்டு, 36 மாதம் நகைச்சீட்டுகளில் பலர் இணைந்தனர். இரு ஆண்டுகள் பணம் கட்டிய நிலையில், முதிர்வு தொகை வழங்கவில்லை. நிலம், நகைச்சீட்டுக்கும் இதே நிலையே ஏற்பட்டது.


பணத்தை கேட்டபோது, நிறுவனம் சார்பில், காசோலை வழங்கப்பட்டது; அதுவும், பணமின்றி திரும்பியது.மூன்று சீட்டுகளிலும், 5,000க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவர்களிடம் இருந்து, 32 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ரத்தினபுரி போலீசார், எங்களை அலைக்கழிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.போலீசார் கூறுகையில், 'இப்பிரச்னையில், நேரடியாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய முடியாது. சென்னையில் உள்ள எஸ்.பி., அலுவலகத்துக்கு புகார்களை அனுப்பி, அனுமதி பெற்றபின், சட்ட நிபுணர்களுடன் ஆலோசிக்கப்படும். அதன்பின், வழக்கு பதியப்படும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X