அரசு கேபிள் இணைப்புக்கு பரிதவிக்கும் அன்னுார் மக்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
22:52

அன்னுார்:அரசு கேபிள் இணைப்பு கிடைக்காமல் அன்னுார் மக்கள் தவிக்கின்றனர்.டிராய் அமைப்பின் புதிய விதிமுறைகளின்படி அன்னுார் வட்டாரத்தில், கேபிள் 'டிவி'க்களில் அனலாக் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. முழுமையாக டிஜிட்டல் ஒளிபரப்பு துவங்கியுள்ளது.


தமிழகத்தில் அரசு கேபிள் கார்ப்பரேஷன் மூலம், 70 லட்சம் இணைப்புகள் கடந்த ஆண்டு இருந்தன. அரசு கேபிள் இணைப்பு பெற விரும்புவோர், செட் டாப் பாக்ஸ் பொருத்த மட்டும், 200 ரூபாய் கொடுத்தால் போதும். வேறு கட்டணம் தேவையில்லை எனஅரசு அறிவித்தது.


மாதாந்திர கட்டணமாக குறைந்தபட்சம் ஜி.எஸ்.டி., சேர்த்து, 150 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவித்தது.அன்னுார் வட்டாரத்தில் அரசு கேபிள் இணைப்புக்காக, 2,000க்கும் மேற்பட்டவர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். தனியார் கேபிள் ஆபரேட்டர்கள், அரசு கேபிள் இணைப்பு இல்லை என்று கூறி, தனியார் நிறுவன கேபிள் இணைப்பு தருகின்றனர்.அதற்கு குறைந்தபட்சமாக மாத கட்டணம், 200 ரூபாய் வசூலிக்கின்றனர்.


அரசு கேபிள் இணைப்பு 'செட் டாப்' பாக்சுடன் கிடைக்கும் வரை, தற்காலிகமாக அரசு கேபிள் சந்தாதாரர்களுக்கு சில சேனல்கள் ஒளிபரப்பாகி வந்தது. அவையும் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது.


இந்நிலையில் இணை ப்பு துண்டிக்கப்பட்டவர்களில், 25 சதவீதம் பேர், பல்வேறு நிறுவனங்களின் 'டிஷ்' ஆன்டனா பொருத்தி வருகின்றனர். 25 சதவீதம் பேர், வேறு தனியார் கேபிள் ஆபரேட்டரிடம், 650 ரூபாய் செலுத்தி, மாதாந்திர கட்டணம், 200 ரூபாய்க்கு இணைப்பு பெற்று வருகின்றனர்.


இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு, மாதாந்திர கட்டணமாக, 100 ரூபாய் செலுத்தி 'கேபிள் டிவி' பார்த்து வந்தோம்.இப்போது, செட் டாப் பாக்சுக்கு, 650 ரூபாய் செலுத்தி, மாதாந்திர கட்டணமாக, 200 ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது.அதுவும் விளையாட்டு சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால், 250 ரூபாய் மாதம் தர வேண்டி உள்ளது. அரசு கேபிள் இணைப்பு கோருவோருக்கு விரைவில் 'செட் டாப்' பாக்ஸ் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X