'பறந்தது' பஞ்சு விலை! பாதாளத்துக்கு சென்றது நூல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:02

அன்னுார்:பஞ்சு விலை உயர்வு, நுால் விற்பனை விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் அன்னுார் தாலுகாவில் பல ஸ்பின்னிங் மில்கள் இரவு 'ஷிப்டை' நிறுத்த முடிவு செய்துள்ளன.அன்னுார் தாலுகாவில், 3,000 ஸ்பிண்டில் முதல் 50 ஆயிரம் ஸ்பிண்டில் வரை திறன் உள்ள, 125 ஸ்பின்னிங் மில்கள் உள்ளன.


இந்த மில்கள் பெரும்பாலும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பஞ்சு கொள்முதல் செய்கின்றன. கும்பகோணம், அவிநாசி என தமிழகத்திலும் குறைந்த அளவு பருத்தி கொள்முதல் செய்கின்றன.இந்த மில்களில் பெரும்பாலும் 40 ம் எண் நுாலும், அதற்கு அடுத்து, 60 ம் எண் நுாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை, சோமனுார், திருப்பூர், ஈரோடு மற்றும் மகாராஷ்டிராவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அன்னுார் தாலுகாவில் உள்ளூர் தொழிலாளர்களுடன், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த, 5,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட வெளிமாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.கடந்த இரு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மில்களில் லாபம் குறைந்து விட்டது. அன்னுார் வட்டாரத்தில் பசூர், கரியாம்பாளையம், மைல் கல் என பல இடங்களில் ஆறு ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டன.


மேலும் பல ஸ்பின்னிங் மில்கள் உற்பத்தியை குறைத்தன.இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறியதாவது: மில்களின் நலிவுக்கு முதல் காரணம் அதிக உற்பத்திதான். பல கோடி ரூபாய் அளவுக்கு நுால் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாட்டு ஆர்டர்கள் குறைந்து விட்டது. உள்நாட்டில் தேவைக்கு அதிகமாக நுால் உற்பத்தியாகிறது. போதுமான பருத்தி விளைச்சல் இல்லை. பஞ்சு விலை நிலையானதாக இல்லை.


தற்போது, 40 ம் எண் நுால் உற்பத்திக்கு தேவையான பஞ்சு ஒரு பேல், 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. நுால் விலை, 50 கிலோ கொண்ட மூட்டை, 12,500 ரூபாயிலிருந்து, 10,900 ரூபாயாக குறைந்துவிட்டது. பல சிரமங்களுக்கிடையே உற்பத்தி செய்யப்பட்ட நுால் விலை பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் சில மில்கள் இரவு ஷிப்டில் உற்பத்தியை நிறுத்தி விட்டன.


தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக மில்கள் போட்டி போட்டு, தொழிலாளர்கள் சம்பளத்தை உயர்த்தி விட்டனர். தொழிலாளர்களை அழைத்து வருவோருக்கு கமிஷன் அதிகரித்து விட்டது.மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு, ஆறு ரூபாய், 80 காசு தர வேண்டி உள்ளது. பல மாநிலங்களில் மூன்று ரூபாய்க்கு மின்சாரம் கிடைக்கிறது.


வங்கி கடனுக்காக வட்டி பெருமளவு வருவாயை எடுத்துக் கொள்கிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை தருவது ஸ்பின்னிங் மில்கள் தான். மில்கள் மூடப்பட்டால் பல லட்சம் பேர் வேலை இழப்பர்.இதை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நுாற்பாலைகளுக்கு மத்திய அரசு தர வேண்டிய 'டப்' மானியத்தை விரைவில் விடுவிக்க வேண்டும். வங்கி கடனுக்கான வட்டியில் சலுகை அளிக்க வேண்டும். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.


தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பருத்தி உற்பத்தி அதிகரிக்க விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறினர்.சிக்கலிலிருந்து விடுபடுமா?மில்களில் குறைந்த செலவில், அதிக உற்பத்தி கிடைக்க நவீனமயமாக்கலுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். ஜவுளி தொழிலில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கடன் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் சிக்கலில் உள்ள ஸ்பின்னிங் மில்கள், அவற்றிலிருந்து மீளும். பல லட்சம் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X