| நோட்டு இன்றி மாணவர் தவிப்பு Dinamalar
நோட்டு இன்றி மாணவர் தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:02

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில், 86 துவக்க, 15 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் பல ஆண்டுகளாக புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளாக நோட்டும் இலவசமாக தரப்படுகிறது.முழு ஆண்டு விடுமுறைக்கு பின், கடந்த ஜூன் 3ம் தேதி துவக்க, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி திறந்தவுடன் சில வகுப்புகளுக்கு மட்டும் நோட்டுகள் வழங்கப்பட்டன.


ஆனால் ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளுக்கு, ஒரு சில நோட்டுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. பல நோட்டுகள் வழங்கப்படவில்லை.இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது;ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பெரும்பாலான நோட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால் கற்றல் பாதிக்கப்படுகிறது. ஆறு, ஏழு, எட்டு வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் பக்கங்கள் உள்ள புல் சைஸ் நோட்டுகள் வழங்க வேண்டும்.மாவட்ட கல்வி அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பெற்றோர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X