| பூங்காவில் படகுகள் பழுது: சவாரி செய்வதில் சிக்கல் Dinamalar
பூங்காவில் படகுகள் பழுது: சவாரி செய்வதில் சிக்கல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:45

கோத்தகிரி:குன்னுார் சிம்ஸ் பூங்காவில், இரு படகுகள் மட்டுமே இயங்குவதால், சுற்றுலா பயணிகள் சவாரி செய்ய காத்திருக்கின்றனர்.குன்னுார் சிம்ஸ் பூங்காவில், கோடை விழா நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.


இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர், படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.பூங்காவில் மொத்தம், 13 படகுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, இரு படகுகள் மட்டுமே இயங்குகின்றன. மீதமுள்ள படகுகள் கரையோரத்தில் பழுது பார்க்காமல், நிறுத்தப்பட்டுள்ளன.இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். பலர் சவாரி செய்யாமலேயே திரும்பி செல்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி, பழுதடைந்த படகுகளை பழுதுபார்த்து இயக்குவதற்கு தோட்டக்கலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X