அரசு மருத்துவமனையில் மழைநீர் சேமிப்புக்கு... சபாஷ்! 'டயாலிசிஸ்' உபரிநீரும் நிலத்தடி நீராக மாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:45

பொன்னேரி : பொன்னேரி அரசு மருத்துவமனை கட்டடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் 'டயாலிசிஸ்' எனும் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவு உபரிநீர் சேமிப்பு ஆகியவை அமைத்திருப்பது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளதுடன், பசுமை வளாகமாக மாற்றும் பணிகளில், நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.



பொன்னேரி அரசு மருத்துவமனையில், தினமும், 1,500 புறநோயாளி களும், 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.சிறுநீரக சுத்திகரிப்பு மையம், கண் சிகிச்சை பிரிவு, பல வகையான அறுவை சிகிச்சைகள் என, மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக செயல்படுகிறது. 4 கோடி ரூபாயில், விபத்து சிகிச்சை பிரிவு கட்டடமும் அமைக்கப்பட்டு வருகிறது.10 ஆயிரம் லிட்டர் நீர்தற்போது, மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனை கூடம் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.இதற்காக, மணலி, சி.பி.சி.எல்., நிறுவனத்தின் பங்களிப்புடன், 24 இடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.ஒவ்வொரு இடத்திலும், நான்கு உறை கிணறுகள், அதன் மையப்பகுதியில், 10 மீட்டர் ஆழத்திற்கு போர்வெல், அதை சுற்றிலும், கருங்கற்கள், மணல் ஆகியவற்றை நிரப்பி, சிறப்பாக அமைக்கப்பட்டு உள்ளன.



மேலும், ரத்த சிறுநீரக சுத்தகரிப்பு நிலையத்தில் உள்ள, ஆறு டயாலிசிஸ் இயந்திரங்களில் இருந்து தினமும் வெளியேறும், 10 ஆயிரம் லிட்டர் உபரி நீரை வீணாக்காமல் நிலத்தடி நீருடன் செல்ல ஆழ்துளை கிணறும், சேகரிப்பு மையமும் அமைக்கப்பட்டு உள்ளது.மழைநீர் சேகரிப்பிற்காக, மருத்துவமனை நிர்வாகம் மேற்கொண்டு உள்ள இந்த முயற்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.'லவ் ேபர்ட்ஸ்' பறவைவளாகத்தை பசுமையாக மாற்றும் வகையில், 200க்கும் மேற்பட்ட மரம் மற்றும் பூச்செடிகள் வளர்க்கப்படுகின்றன.மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையால், மரம், செடிகள் நன்கு வளர்ந்து, வளாகம் பசுமையாக காட்சியளிக்கிறது.



கர்ப்பிணிகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையில், மகப்பேறு வளாகத்தில் பல வண்ணங்களில், 'லவ் ேபர்ட்ஸ்' எனும் பறவை வளர்க்கப்படுகிறது. இதை, குழந்தைகள், பெண்கள் பார்த்து மகிழ்கின்றனர்.வரவேற்புபொன்னேரி அரசு மருத்துவமனையில் மழைநீர் சேகரிப்பு அமைத்து, மற்ற அரசு அலுவல கங்களுக்கு, முன்மாதிரியாக திகழ்கிறது. இது, மிகவும் வரவேற்கத்தக்கது. 15 ஆண்டுகளுக்கு முன், அரசின் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், செயல்பாடு இன்றி கிடக்கிறது. அனைவரும் தாமாக முன்வந்து, இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.சமூக ஆர்வலர்கள், பொன்னேரி.



விரைவில் பயோ கேஸ், சூரிய ஒளி மின்சாரம்:


சென்னை உட்பட பல பகுதிகளில், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என, உந்துதல் ஏற்பட்டது. மழைநீர் சேகரிப்பு மையங்களையும், டயாலிசிஸ் பிரிவு உபநீரை சேமிக்கவும் நடவடிக்கை எடுத்து உள்ளோம்.சமையல் கூடத்திற்கு சாண எரிவாயு பயன்படுத்தவும், மருத்துவமனை கட்டடங்களுக்கு சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு உள்ளோம். அதற்கான, முதற்கட்ட பணிகள் நடக்கின்றன. பொன்னேரி அரசு மருத்துவமனையை, பசுமை வளாகமாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.சி.அனுரத்னா, தலைமை மருத்துவர், பொன்னேரி அரசு மருத்துவமனை

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X