இந்த வாரம்... ஆரவாரம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:53

ஜூலை 22: பிரம்ம சூத்திரம்பணம், புகழ், பதவி, உலகியல் இன்பம் ஆகியவற்றைத் தாண்டி ஆராய்பவர்களுக்கு, ஒரு வழிகாட்டியாகும். அர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் சார்பில், பிரம்ம சூத்திரம் குறித்த சிறப்பு சொற்பொழிவு, காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.


ஜூலை 22: ராக்கி தயாரிப்பு பயிற்சிதமிழகத்திலும் பிரபலமாகி விட்ட ராக்கி கட்டுதல் விழாவுக்கு, வீட்டிலேயே ராக்கி தயாரிக்கலாம். சித்ராஸ் டெக்கார்ஸ் சார்பில், 15 டிசைன்களில் ராக்கி கட்டுதல் குறித்து, பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூலை 24: சித்த மருத்துவ முகாம்பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், ஈஸ்வரிய வித்யாலயம் மற்றும் சிவசக்தி சித்தா மருத்துவமனை இணைந்து, இலவச சித்த மருத்துவ முகாமை நடத்துகின்றன. மதியம், 2:00 முதல் மாலை 5:00 மணி வரை நடத்தப்படும் முகாமில், மருந்துகளும் இலவசமாக வழங்கப்படும்.


ஜூலை 27: மகிழ்ச்சிக்கு துணைகொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், கோவை புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாலை, 6:30 மணிக்கு, 'மகிழ்ச்சியான குடும்பத்திற்கு பெரிதும் துணை, கை நிறைய சம்பளம், கணிசமான சேமிப்பு, கடனற்ற வாழ்க்கை' என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடக்கிறது. பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமை வகிக்கிறார்.

ஜூலை 27: கேக் செய்யலாம்கொண்டாட்டங்களையும் இனிக்கச் செய்யும் கேக்குகளை, வண்ண அலங்காரங்களில், புது வடிவங்களில் வீட்டிலேயே செய்து கொடுத்தால், குழந்தைகள், பெரியவர்கள் என எல்லோர் மனதிலும் தனி இடம் பிடித்து விடலாம். கம்யூனிட்டி கபே சார்பில், கேக் தயாரிப்பு பயிலரங்கு, காலை, 11:00 மணி முதல் நடக்கிறது.



ஜூலை 27: நடன போட்டிகிளஸ்டர் மீடியா கல்லுாரி சார்பில், 'எக்ஸ்புளோர்' என்ற தலைப்பில், ஜூனியர் நடன சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. தனி, குழு என இரு பிரிவாக நடக்கும் போட்டியில், எட்டு முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம்.

ஜூலை 27: குழந்தைகள் ஆடை அணிவகுப்புகுழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சாமுத்திரிகாஸ் டிசைனர் ஸ்டுடியோ, ரூபின் ராஜ் புரடக்ஷன் சார்பில், 'குளோபல் கிட்ஸ் பேஷன்ஷோ' நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கும், ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஐந்து முதல் 12 வயதிற்குட்பட்ட, குழந்தைகள் பங்கேற்கலாம்.

ஜூலை 28: பகவத்கீதைகற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதி காலம் வரையிலும், மற்றவர்களுக்காக செலவிட வேண்டும் என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. ஸ்ரீ சாய் துவாரகா டிரஸ்ட் சார்பில், பகவத்கீதை சொற்பொழிவு மாலை: 6:00 மணிக்கு நடக்கிறது.


ஜூலை 28: பென்சில் மினியேச்சர்ரசனையாக எழுதுவது ஒரு கலை. எழுதுகோலிலே ரசனையை வடிப்பதும் ஒரு கலை. பென்சில் மினியேச்சர் செய்வது குறித்து, தி கிராப்ட் பார்ம் சார்பில் மதியம், 2:30 முதல் மாலை, 6:00 மணி வரை, ஒரு நாள் பயிலரங்கு நடக்கிறது.



 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X