| மணலில் சிக்கி ஒருவர் பலி Dinamalar
மணலில் சிக்கி ஒருவர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:54

ஊத்துக்கோட்டை: ஏரியில் மணல் எடுக்கும்போது, குழியில் சிக்கி ஒருவர் இறந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, 36. இவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சீனு, 32, ஆகிய இருவரும், நேற்று முன்தினம் இரவு, கிராமத்தில் உள்ள ஏரியில் மணல் எடுத்துக் கொண்டு இருந்தனர்.அப்போது நிலவிய இருட்டால், ஏரியில் இருந்த குழியில் முனுசாமி விழுந்து விட்டார். மூச்சு திணறிய நிலையில் கூச்சலிட்டார். அவரை காப்பாற்ற சென்ற சீனுவும் குழியில் சிக்கி கொண்டார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு, கிராமத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று, குழியில் இருந்த இருவரை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.முனுசாமி, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இறந்தார். மற்றொருவர், சிறு காயங்களுடன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இது குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X