| கணபதி சாலை சந்திப்பில் Dinamalar
கணபதி சாலை சந்திப்பில்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:54

வால்வு பழுதால் குடிநீர் வீண்பேரூர், ஆறுமுக கவுண்டனுார், ரோஜா நகர் மயானம் அருகில், குழாய் வால்வு பழுதால், குடிநீர் வீணாகிறது.-கருணாம்பிகை, ரோஜா நகர்.

குப்பை தொட்டியை ஓரமாக வைக்கணும்கணபதி, மணியகாரம்பாளையம், தனியார் பள்ளி அருகில், சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ஹரிகிருஷ்ணன், கணபதி.

ரோடு மோசம்மேட்டுப்பாளையம் ரோடு - கே.என்.ஜி.,புதுார் ரோடு, வி.எல்.கே.நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, பணி முடிந்து முறையாக சீரமைக்கப்படாததால், குண்டும் குழியுமாக உள்ளது.-சிவபாலன், வி.எல்.கே.நகர்

இந்திரா நகரில் விளக்கு எரிவதில்லைகாளப்பட்டி, நேரு நகர் கிழக்கு, இந்திரா நகரில், தெருவிளக்குகள் எரிவதில்லை. மின் வாரியத்தில் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.- செல்லதுரை, நேரு நகர்.

பயனற்ற 'ஏ.டி.எம்.,' மையம்சுந்தராபுரம் - போத்தனுார், சாரதா மில் ரோடு, கவுசிகா மருத்துவமனை எதிரில் உள்ள, கனரா வங்கி 'ஏ.டி.எம்.,' மையம், கடந்த 3 மாதங்களாக பயனற்று உள்ளது.-ராஜசேகர், போத்தனுார்.

கிரிவல பாதையில் அட்டூழியம்சரவணம்பட்டி, கரட்டுமேடு முருகன் கோவில் கிரிவலப்பாதையில், சமூக விரோதிகள், மது அருந்தி விட்டு, பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர்; பக்தர்கள் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.- சுனில்குமார், சரவணம்பட்டி.

குண்டும் குழியுமான சாலைசங்கனுார் ரோடு, மாநகராட்சி நகர் நல மையம் அருகில், ரோடு குண்டும் குழியுமாக உள்ளது; இருசக்கர வாகன ஓட்டிகள், தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.-சங்கர், கணபதி.

சாலையை செப்பனிடணும்சின்னமேட்டுப்பாளையம் - வட்டமலைபாளையம் செல்லும் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். இச்சாலையை செப்பனிட வேண்டும்.- வெங்கடேசன், சின்னமேட்டுப்பாளையம்.

சாக்கடை கால்வாய் அடைப்புபொள்ளாச்சி ரோடு, குறிச்சி, காந்திஜி சாலையில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.-பாலசக்தி, குறிச்சி.

சின்னவேடம்பட்டியில் சாலை மோசம்வாகன போக்குவரத்து அதிகம் உள்ள, சின்னவேடம்பட்டி, இட்டேரி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.- பாலகிருஷ்ணன், லட்சுமி நகர்

சிக்னல் இல்லாததால் சிக்கல்மேட்டுப்பாளையம் ரோடு, சங்கனுார், கணபதி செல்லும் சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னல் அமைத்து பல ஆண்டுகளாகியும் இயங்குவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.-ஜெயக்குமார், வெங்கிட்டாபுரம்.

நேருஜி வீதியில் சுகாதார சீர்கேடுமாநகராட்சி, 47வது வார்டுக்குட்பட்ட, சங்கனுார் ரோடு, நேருஜி வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்குகிறது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மணிவண்ணன், நேருஜி வீதி.

வேகத்தடை வேண்டும்அஜ்ஜனுார், குரும்பபாளையம் ரோடு, காயத்ரி கோவில் அருகில், வேகத்தடை அமைக்க வேண்டும்.-ஜெயராமன், காயத்ரி நகர்.

ரோடெல்லாம் ஜல்லிக்கற்கள்டாக்டர் பாலசுந்தரம் ரோடு, ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் உள்ள சாலை, குண்டும் குழியுமாக உள்ளது.- சதீஷ்குமார், ஒண்டிப்புதுார்.

தெருவிளக்கு இல்லைகணபதி, குமரன் நகரில் உள்ள, மின் கம்பங்களில்(எண்களில்: 384, 699, 701, 705) விளக்குகள் எரிவதில்லை.-கனகராஜ், கணபதி.

சுகாதார பணி மேற்கொள்வதில்லைதடாகம் ரோடு, இடையர்பாளையம் கோல்டன் நகரில், சுகாதார பணி மேற்கொள்ளப்படாததால், சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- சங்கர், இடையர்பாளையம்.

குடிநீர் வீண்துடியலுார், டி.என்.பி. நகரில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- சுரேஷ்குமார், துடியலுார்.

சாக்கடை கால்வாயில் குப்பை குவியல்குனியமுத்துார், இடையர்பாளையம், வி.பி.சி., நகரில், சாக்கடை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக், பாட்டில்கள் நிரம்பியுள்ளன. கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது.-செந்தில்குமார், இடையர்பாளையம்.

குழாய் உடைப்பு; குடிநீர் வீண்திருச்சி ரோடு, சிங்காநல்லுார் சார்பதிவாளர் அலுவலகம் அருகில், குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாக்கடை கால்வாயில் ஓடுகிறது.- ஆனந்தகுமார், நேதாஜிபுரம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X