| 2 அம்மன் கோவில்களில் தீ மிதி விழா Dinamalar
2 அம்மன் கோவில்களில் தீ மிதி விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:55

திருத்தணி : இரு அம்மன் கோவில்களில் நடந்த தீ மிதி விழாவில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி அடுத்த, பி.சி.என்.கண்டிகை, அருந்ததி காலனியில் உள்ள மாத்தம்மன் கோவிலில், தீ மிதி விழா, 17ம் தேதி, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும், மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வந்தன.நேற்று, தீ மிதி விழாவையொட்டி, காலையில் பொங்கல் மற்றும் கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:30 மணிக்கு, அக்னி குண்டத்தில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது.அதே போல், கார்த்திகேயபுரம் ஏரிக்கரையோரம் உள்ள கன்னியம்மன் கோவிலில், 5ம் ஆண்டு தீ மிதி விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலையில், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இரவு, 7:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி, தீ மிதித்தனர். இந்த விழாவில், திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X