| வங்கனுாரில் என்று தீரும் இந்த தவிப்பு Dinamalar
வங்கனுாரில் என்று தீரும் இந்த தவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:55

ஆர்.கே.பேட்டை : நான்கு ஆண்டுகளுக்கு பின், வங்கனுாரில், தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்காக, ஜல்லிக்கல் சாலையில், குடங்களுடன் நடந்து செல்லும் சிறுமியர் மற்றும் வீட்டுக்கு வீடு பிளாஸ்டிக் கேன்களை, தண்ணீருக்காக நிறுத்தி வைத்து காத்திருக்கும் பொதுமக்கள், தண்ணீருக்காக தவித்து வருகின்றனர்.வங்கனுார் ஊராட்சியில், 2015க்கு பின், தற்போது, மீண்டும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.குழாயில், குடிநீர் வினியோகம் இல்லாத பகுதிகளில், டிராக்டரில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். 200 லிட்டர் தண்ணீர், 30 ரூபாய் என, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, வீட்டுக்கு வீடு வாசற்படியில், பிளாஸ்டிக் கேன்களுடன் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.வங்கனுார் காலனிக்குள், தண்ணீர் வராததால், ஊருக்கு வெளியே, நெடுஞ்சாலையை ஒட்டி பாயும் குழாயில் இருந்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.வங்கனுார் காலனிக்குள், தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஜல்லிக்கல் பரவிக் கிடக்கும் சாலை வழியாக, சிறுமியரும், பெண்களும் குடங்களுடன் நடந்து சென்று தண்ணீர் படித்து வருகின்றனர். வங்கனுாரின் இந்த நிலைமை எப்போது மாறும் என, பொதுமக்கள் ஏக்கத்துடன் போராடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X