| குழாய் பழுதால் குடிநீர் வீண் Dinamalar
குழாய் பழுதால் குடிநீர் வீண்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
23:58

தொடுகாடு : தொடுகாடு ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், குழாய் பழுதால் குடிநீர் வீணாகி வருகிறது.


தொடுகாடு ஊராட்சியில், அரசு பள்ளி அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்தது.இந்த குடிநீர் தொட்டியின் மேற்புரம் ஏறி, குடிநீர் தொட்டியில் கொள்ளளவிற்கு ஏற்ப, குளோரினேஷன் மாத்திரையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், தற்போது, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்படும் குழாய் பகுதிகளில், புதிதாக வால்வு போன்ற பகுதியை ஏற்படுத்தி, அந்த குழாய் மூலம் குளோரினேஷன் மாத்திரை பயன்படுத்தி வருகின்றனர்.இதில், தொடுகாடு ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீர் ஏற்றப்படும் குழாய் பகுதியில், பழுது ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது.அருகிலேயே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்தும் குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், பழுதடைந்த குழாயை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுத்து நிறுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X