மீனவர் கூட்டுறவு சங்கத்தேர்தல் வழக்கு தொடர்ந்தவர்கள் வெற்றி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:11

ராமநாதபுரம் : மண்டபம் எப்.எஸ்.ஏ.,-2 மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில் வழக்கு தொடர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.மண்டபம் அருகே எப்.எஸ்.ஏ.,-2 வேதாளை மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 7 பேரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்தாண்டு ஏப்., மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ஹபீப், களஞ்சியம், காளிமுத்து, முகமது அயூப்கான், முஜிபுர் ரஹ்மான், நாகரத்தினம், சீனி அகமது கபீர் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்ட செல்லச்சாமி, கோவிந்தன், முகமது இப்ராஹிம் ஷா, முருகேசன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். போட்டியின்றி தேர்வு செய்த 7 பேருடன், வழக்கு தொடர்ந்த 4 பேரையும் சேர்த்து தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2,229 உறுப்பினர்களில் 316 உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர். எஞ்சிய 1,913 உறுப்பினர்கள் ஒருவருக்கு தலா 7 ஓட்டுகள் என்ற விதியின் படி ஜூலை 19ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 1,065 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். 848 பேர் ஓட்டளிக்கவில்லை, தேர்தல் அலுவலர் பாலமுருகன் முன்னிலையில் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தேர்தலை முறையாக நடத்தகோரி வழக்குப்போட்ட செல்லச்சாமி 795, கோவிந்தன் 786, முகம்மது இப்ராஹிம் ஷா 736, முருகேசன் 687, களஞ்சியம் 328, ஹபீப் 311, காளிமுத்து 308 ஓட்டுக்கள் பெற்று எப்.எஸ்.ஐ., வேதாளை-2 மீனவர் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X