| ஆலந்துார் மேம்பால நடைபாதை Dinamalar
ஆலந்துார் மேம்பால நடைபாதை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:17

சைதாப்பேட்டை : அடையாறு ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள, ஆலந்துார் மேம்பால நடைபாதை, 36 லட்சம் ரூபாய் செலவில், அலங்கார தரை ஓடுகள் பதித்து சீரமைக்கப்படுகிறது.



கிண்டியில் இருந்து, சிட்கோ வழியாக, சைதாப்பேட்டை செல்லும் சாலையில், அடையாறு ஆற்றின் குறுக்கே, ஆலந்துார் மேம்பாலம் உள்ளது. கிண்டியில் இருந்து துரித பயணமாக, சைதாப்பேட்டை, மேற்கு சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த பாலம் வழியாக செல்கின்றனர்.இரு வழி பாதையான இந்த பாலம், 460 அடி நீளம், 23 அடி அகலம் கொண்டது. இரு பக்கவாட்டிலும், தலா, 5 அடி அகலத்தில் நடைபாதை உள்ளது.சைதாப்பேட்டையில் இருந்து, சிட்கோ, லேபர் காலனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பாதசாரிகள், இந்த நடைபாதையை பயன்படுத்துகின்றனர்.



நடைபாதைக்குள், மின்சார வடம் மற்றும் தனியார் தொலை தொடர்பு வடங்கள் பதிக்கப்பட்டு உள்ளன. அதற்கு மேல், நடைபாதை அமைக்கப்பட்டது.அடிக்கடி வடங்கள் பதிக்க, நடைபாதை கற்கள் நகர்த்தப்பட்டதால், பள்ளம் விழுந்து, பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.இந்நிலையில், 36 லட்சம் ரூபாய் செலவில், அலங்கார தரை ஓடுகள் பதித்து, தற்போது நடைபாதை சீரமைக்கப்படுகிறது.



நடைபாதையை சேதப்படுத்தாத வகையில், வடங்கள் பதிக்க, 15 அடி இடைவெளியில், தனி கட்டமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, பாதசாரிகள், சிரமம் இல்லாமல், நடைபாதையை பயன்படுத்த முடிவதுடன், சேதம் அடைவதும் தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X