கண்மாய், வரத்து கால்வாய்கள், ரோட்டோர ஆக்கிரமிப்பு அகற்றும் பணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:18

சிவகங்கை : கண்மாய், வரத்து கால்வாய்கள், ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி சிவகங்கை மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.


மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழையின்றி கண்மாய், ஊரணிகள் வறண்டு விட்டன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதித்து, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளன. இதனால் கண்மாய், ஊரணிகளுக்கு மழைக்காலங்களில் நீர்சேகரமாக ஏதுவாக, வரத்து கால்வாய், கண்மாய் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழை நீர் தடையின்றி செல்ல ஏதுவாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.கடைகள் ஆக்கிரமிப்புஅதே போன்று ரோட்டோரத்தில் உள்ளாட்சி நிர்வாக அனுமதியின்றியும், உள்ளாட்சிக்கு வாடகை செலுத்தாமல் லட்சக்கணக்கான கடைகள் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இக்கடைகளால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்துார் போன்ற நகரங்களில் வாகன விபத்துக்களும் நேரிடுகின்றன. மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டை தடுக்க வேண்டிய உள்ளாட்சி அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால், வழக்கம் போல் இவற்றின் பயன்பாடு அதிகரித்து, நீர்நிலைகளை பாதிக்க செய்கின்றன.குறிப்பாக டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் கப்கள் அதிகம் விற்கப்படுகின்றன. மதுபாட்டிலை வாங்கி நீர்நிலை புறம்போக்கில் அமர்ந்து மது அருந்துவோர் அவற்றை கால்வாயில் வீசி விட்டு செல்கின்றனர். இதனால் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்கள் நீர்நிலைகளில் மக்காமல் கிடக்கிறது. அவ்வப்போது பெய்யும் சொற்ப மழை நீரும் கண்மாய், ஊரணிகளுக்கு செல்ல முடியாமல் திணறுகின்றன.கிடப்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிமழைக்காலங்களில் கண்மாய், ஊரணிகளில் மழை நீர் சேகரமாக வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதே போன்று ரோட்டோர ஆக்கிரமிப்புகடைகளை அகற்றவும் கூறியது. நீதிமன்ற உத்தரவிட்டதும் வேகமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். கண்மாய், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி முடங்கியது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது, குறுக்கிட்டு பேசிய மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வாரந்தோறும் சனியன்று தாசில்தார், டி.எஸ்.பி.,க்கள் தலைமையிலான குழுவினர் கண்மாய், ஊரணி, ரோட்டோர கடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவர் என தெரிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பு இன்றைக்கு விவசாயிகள், பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் எங்கும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடக்கவில்லை என்பது நிசப்தம்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X