| மானாமதுரையில் குப்பையில் தீ Dinamalar
மானாமதுரையில் குப்பையில் தீ
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:19

மானாமதுரை : மானாமதுரை வைகை ஆற்றுக்குள் குப்பையை கொட்டி தீ வைப்பதால் எழும் புகையால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சேகரமாகும் குப்பை தாயமங்கலம் ரோட்டில் மாங்குளம் அருகேஉள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுவருகிறது.அதற்கு முன்பு மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குப்பை கிடங்கிலும்,அரசுகுளி மயானம்அருகே வைகை ஆற்றிலும் குப்பை கொட்டப்பட்டு வந்தன.இந்நிலையில் மாங்குளத்தில் குப்பைக்கிடங்கு செயல்பட துவங்கியதிலிருந்து மேற்கண்ட இடங்களில் குப்பையை கொட்டக்கூடாது என பேரூராட்சி நிர்வாகம்துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டது,இருப்பினும் ஒரு சில ஊழியர்கள் டிராக்டர்களில் அள்ளப்படும் குப்பையை மாங்குளத்திற்கு கொண்டு செல்லாமல் வைகை ஆற்றுக்குள் கொட்டி விடுகின்றனர்.குப்பையில் கிடக்கும் பொருள்களை சேகரிப்பவர்களும், சில துப்புரவு பணியாளர்களும் அதில் கிடக்கும் ஒயர்கள், டயர்களில் இருக்கும் கம்பிகளை எடுப்பதற்காக குப்பையில் அடிக்கடி தீ வைத்து விடுவதால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு துர்நாற்றம் ஏற்படுகிறது, மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றுக்குள் குப்பையை கொட்டி தீ வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X