| திருவேங்கடத்தில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள் Dinamalar
திருவேங்கடத்தில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:20

இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில், தண்ணீரின்றி மாணவர்கள்சிரமப்படுகின்றனர்.திருவேங்கடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,25க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தினுள்,போர்வெல் மூலம் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. போர்வெல்லில், தண்ணீர் இல்லாமல் போனதால் பல மாதங்களாக மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் கைகழுவுவதற்கும், கழிப்பறை,பயன்பாட்டிற்கும், சமையல் தேவைகளுக்கும் தண்ணீரின்றி ஆசிரியர், மாணவர்கள் என அனைவரும் சிரமம் அடைந்துவருகின்றனர். இப்பிரச்னை குறித்து மாணவர்களின்பெற்றோர்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லைஇதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில்; பள்ளியின் உள் பகுதியில் இருந்த போர்வெல் கடந்த பலமாதங்களாக பயனற்று கிடக்கிறது. தண்ணீரின்றி மாணவர்களும்,ஆசிரியர்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே,சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி உரியநடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். என்றார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X