| பள்ளி விளையாட்டு நாளை துவக்கம் Dinamalar
பள்ளி விளையாட்டு நாளை துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:23

சென்னை, : சென்னையில், விவேகானந்தா வித்யாலாயா பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி, நாளை துவங்குகிறது.



பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில், விவேகானந்தா வித்யாலா பள்ளிகளுக்கு இடையிலான, விளையாட்டு போட்டி, நாளை துவங்குகிறது.இதில், தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. போட்டியில், 25க்கும் மேற்பட்ட பள்ளிகள், திறமையை வெளிப்படுத்துகின்றன.சர்வதேச திறம் வாய்ந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்று, மாணவ - மாணவியரை ஊக்குவிக்கின்றனர். மூன்று நாட்களுக்கு நடக்கும் போட்டியானது, 25ம் தேதி நிறைவு பெறுகிறது.போட்டியில், வெற்றி பெறுவோருக்கு, கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X