| 3 மாவட்டங்களுக்கு, 'குட்கா' சப்ளை Dinamalar
3 மாவட்டங்களுக்கு, 'குட்கா' சப்ளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:27

சென்னை : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை வினியோகம் செய்த, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.



வேப்பேரி அடுத்த, சூளை ரவுண்டானா வழியாக, ஆட்டோவில், தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், அந்த ஆட்டோவை மடக்கினர். மண்ணடியைச் சேர்ந்த, சதீஷ்குமார், 33, என்பவரை பிடித்து விசாரித்தனர்.அப்போது, மணலியைச் சேர்ந்த, சந்தீப்குமார் பாண்டே, 35, ஷாம் தார் சுக்லா, 55, ஆகியோர், யானைக்கவுனி, இருளப்பன் தெருவில், சட்ட விரோதமாக, குடோன்கள் நடத்தி, அங்கு குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து வருவது தெரியவந்தது.



போலீசார், அந்த குடோனில் சோதனை நடத்தி, போதை பொருட்கள் தயாரிப்புக்கான, 1.3 டன் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும், சந்தீப்குமார் பாண்டே உள்ளிட்டோர், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, கடைகளுக்கு வினியோகம் செய்து வந்தது தெரியவந்தது.சதீஷ்குமார் உள்ளிட்ட மூவரையும், பெரியமேடு போலீசார் கைது செய்தனர்.



அதேபோல, தலைமைச்செயலக காலனி காவல் நிலைய எல்லையில், சுப்புராயன், 5வது தெருவில், 'சண்முகா கூல்டிரிங்ஸ் ஏஜென்சி' என்ற கடையிலும், போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு, 47 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர், அம்பத்துாரைச் சேர்ந்த, சண்முகம், 34, என்பவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X