கொலை செய்த 7 பேர் கைது; 12 மணி நேரத்தில் போலீசார் கைது நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:33

கமுதி : கமுதி அருகே அரியமங்கலத்தில் அண்ணனுக்கு பதிலாக தம்பி மணிகண்டனை பழிக்கு பழியாக கொலை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். கமுதி அருகே எறுமைகுளத்தை சேர்ந்த வழிவிட்டான், மதுரையில் 2 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் கமுதி அரியமங்கலத்தை சேர்ந்த சேகர் ஈடுபட்டுள்ளார். பொட்டு சுரேஷ் கொலை வழக்கிலும் தொடர்புள்ளதால், சேகர் சிறையில் உள்ளார். இந்நிலையில், சேகரை பழிவாங்கும் நோக்கில், வழிவிட்டானின் உறவினர்கள் சில நாட்களாக, சேகரின் தம்பி மணிகண்டனை கொலை செய்ய, அரியமங்கலத்திற்கு அதே ஊரை சேர்ந்த கருப்பணன் மகன் சுந்தர் 17, தலைமையில் மதுரையை சேர்ந்த 7 பேர் வந்துள்ளனர். சம்பவ நாளான நேற்றுமுன்தினம், பெருநாழியில் மணிகண்டனை அரிவாள், வாள்களால், வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பியோடினர். தப்பியோடிய மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த பெரியசாமி மகன் வழிவிட்டான் 17, தர்மலிங்கம் மகன் பழனிக்குமார் 16, இருவரும் மதுரை திருமங்கலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரிடம் சிக்கினர்.இவர்களிடம் போலீசார் விசாரித்ததில்,கொலையில் ஈடுபட்ட எறுமைகுளத்தை சேர்ந்த கருப்பணன் மகன் சுந்தர் (எ) மீனாட்சிசுந்தரம் 18, மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த பரந்தாமன் மகன் முருகன் என்ற அழகுமுருகன் 17, ஜெகநாதமூர்த்தி மகன் லிங்கம் என்ற லிங்கபிரசாத் 17, ஆறுமுகம் மகன் அருண் என்ற அருண்ராஜபாண்டி 16, நாகேந்திரன் மகன் கனி என்ற முத்துமுருகன் 18, ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X