| பயிர்காப்பீடு திட்ட முகாம் Dinamalar
பயிர்காப்பீடு திட்ட முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:35

சிங்கம்புணரி : கல்லம்பட்டியில் பயிர்காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.இணை இயக்குனர் மு.இளங்கோவன் தலைமை வகித்தார். உதவி இயக்குனர் மேரி ஐரின்ஆக்னிட்டா பயிர்காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யும் முறைகள் பற்றி விளக்கினார்.ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவன காரைக்குடி கிளை மேலாளர் சண்முகராஜா விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களை விரைவில் சரி செய்து உரிய நேரத்தில் இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.செல்வி, வேளாண் பொறியியல்துறை உதவிப் பொறியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.சிங்கம்புணரி வட்டார வேளாண்மை விரிவாக்க மைய வேளாண்மை அலுவலர் செல்வி, சரண்யா, துணை வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் சுபத்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் மா.சண்முகப்பிரியா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X