| விளையாட்டு விழா Dinamalar
விளையாட்டு விழா
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:35

தேவகோட்டை : தேவகோட்டை தேபிரிட்டோ மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா அதிபர் வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. தலைமையாசியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் அருளானந்தம் அறிக்கை படித்தார். டியூக்ஸ் இந்தியா நிறுவன இயக்குனர் ஜோசப் கென்னடி கொடியேற்றினார். ஐதராபாத் ஜெனரல் டேடம் நிர்வாக இயக்குனர் பச்சை முத்து, தொழிலதிபர் பீட்டர் பரிசு வழங்கினர். மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்கள் ஒலிம்பிக் கொடியேற்றி தீபம் ஏற்றினர். என்.சி.சி.,என்.எஸ்.எஸ்., மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. சூப்பர் சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சந்தோஷிற்கு கோப்பை வழங்கப்பட்டது. ஆசிரியர் அலுவலர் சங்க செயலர் பிரிட்டோ ராஜ் நன்றி கூறினார். உடற்கல்வி இயக்குநர் பிரபாகரன் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X