பராமரிப்பில்லாத பாலத்தில் மெகா பள்ளம்! நிதி இல்லாமல் ஊராட்சி திண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:38

ஆனைமலை:காளியாபுரத்தில், தரைப்பாலம் சிதிலமடைந்து படு மோசமாக இருப்பதால், மக்கள், விவசாயிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை அடுத்த காளியாபுரத்தில் இருந்து வெப்பரைப்பதி வழியாக ஆனைமலைக்குச் செல்லலாம். இவ்வழியில், மக்களின் வசதிக்காக, 2001ல் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், காளியாபுரத்தில் இருந்து வெப்பரைப்பதி செல்லும் வரையில் தார் ரோடு அமைக்கப்பட்டது.


அதன்பின், 2006ல் காளியாபுரம் மயானம் அருகே இந்த ரோட்டில், உப்பாறு ஓடையின் மீது, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டது. விவசாயிகள், மக்கள் பலரும் இந்த ரோட்டை பயன்படுத்தி, ஆனைமலை பகுதிக்கு தங்கள் விளைபொருட்களை கொண்டு செல்கின்றனர்; அதிக அளவிலான மக்களும் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், பாலம் மற்றும் ரோடு பல ஆண்டுகளாக, புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால், ரோடு குண்டும் குழியுமாக உருமாறி மெட்டல் ரோடு போல காட்சியளிக்கிறது. பாலத்தில் கான்கிரீட் பூச்சுக்கள் உதிர்ந்து, குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளது.


இதனால், மக்கள் இந்த ரோட்டையும், பாலத்தையும் பயன்படுத்த இயலாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். புதிய பாலம் கட்டி, ரோட்டை புதுப்பிக்க, காளியாபுரம் ஊராட்சியினர், ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காளியாபுரம் ஊராட்சி செயலாளர் முத்துமாணிக்கம் கூறுகையில், ''புதிய பாலம் அமைத்து, ரோட்டை புதுப்பிக்க நிதி கேட்டு, அரசுக்கு பலமுறை கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், இன்னமும் நிதி கிடைக்கவில்லை. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் புதிய பாலம் கட்டப்பட்டு, ரோடு புதுப்பிக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜூலை-201907:32:17 IST Report Abuse
ஆப்பு ஆஹா...எவ்வளவு பெரிய பள்ளம்... அதுல மழை நீர் சேமிப்பு... சூப்பர் . ஜல்சக்தி அமைச்சகத்துக்கு போட்டோ அனுப்புங்க.
Rate this:
Share this comment
Cancel
22-ஜூலை-201907:31:01 IST Report Abuse
ஆப்பு ரோடாவது... பாலமாவது... அரசே 3.86 லட்சம் கோடி கடனில் இருக்கு... நீங்களே ஏதாவது பண்ணிக்கோங்க... தொறப்பு விழாவுக்கு அமைச்சர் வருவாரு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X