| 'குடிமராமத்து' பணி: கண்காணிக்க குழு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு Dinamalar
'குடிமராமத்து' பணி: கண்காணிக்க குழு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:39

பொள்ளாச்சி: ''குடிமராமத்துப்பணிகள் குறித்து கோரிக்கைகள், சந்தேகங்களை விளக்க கோட்டாட்சியர் தலைமையில் அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது,'' என பொள்ளாச்சி அருகே நடந்த பயிற்சி முகாமில், கலெக்டர் பேசினார்.பொள்ளாச்சி நஞ்சேகவுண்டன்புதுாரில், குடிமராமத்துப்பணி குறித்த ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் நடந்தது.


வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர்.கோவை கலெக்டர் ராஜாமணி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசியதாவது: குடிமராமத்து திட்டத்தில், மாவட்டத்தில், 45 பணிகள், 7.43 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில், 44 பணிகள் பொள்ளாச்சி கோட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் குடிமராமத்துப்பணி செய்து, நீர்நிலைகளில் கூடுதல் மழைநீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. துார்வார தோண்டப்பட்ட வண்டல் மண் விளைநிலங்களில், உரமாக பயன்படுகிறது.திட்ட பணிகள் குறித்து கோரிக்கைகள், சந்தேகங்களை விளக்க வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை அரசு விவசாயிகளுடன் நேரடியாக தொடர்பு படுத்தி மேற்கொள்வதால் விவசாயிகளின் தேவைகள், நோக்கங்களை உடனடியாக பூர்த்தி செய்ய இயலும். அதுபோல பாசன சங்கங்கள், தினசரி பண கையிருப்பு பதிவேடு, உறுப்பினர் பதிவேடு ரசீது புத்தகம், செலவு பட்டியல் கோப்பு, உள்ளிட்ட பதிவேடுகளை முறையாக பராமரித்திடல் வேண்டும்.ஏரிகளின் மண் கரைகளை புனரமைத்தல் அல்லது வலுப்படுத்துதல், பாசன மதகுகளை புனரமைத்தல், மிகை நீர் கலிங்குகளை பழுது பார்த்தல், கால்வாய்கள் அல்லது வழங்கு கால்வாய்களை புனரமைத்தல் ஆகிய நான்கு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


புறக்கணிப்பால் பரபரப்புகோட்டூர், அங்கலகுறிச்சி, காளியாபுரம், பெத்தநாயக்கனுார், வளந்தாயமரம், துறையூர், திம்மங்குத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குடிமராமத்துப்பணிகள் குறித்து பாசன சங்கத்தினருக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். ஆனைமலை இந்திரா நகரில் நடந்த பயிற்சி முகாமினை, பழைய ஆயக்கட்டு விவசாயிகள், தண்ணீர் கிடைக்காத விரக்தியில் புறக்கணித்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X