| பழநியில் பகலில் அதிரும் ஒலி பெருக்கியால் அவதி Dinamalar
பழநியில் பகலில் அதிரும் ஒலி பெருக்கியால் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:55

பழநி : பழநி நகர், கிராமப்பகுதிகளில் பொது, தனியார் நிகழ்ச்சிகளுக்கு கூம்பு வடிவகுழாய், பெரிய ஸ்பீக்கர் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதால் வயதானவர்கள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.பொதுவாக அதிக சத்தத்தை எழுப்பும் கூம்பு வடிவகுழாய்கள், பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்த உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இந்நிலையில் பழநி நகர், புறநகர்ப்பகுதி, அடிவாரம் பகுதியில் பொது, தனியார் நகழ்ச்சிகளுக்கு அதிகளவில் கூம்புவடிவகுழாய், பெரிய ஸ்பீக்கர்களை பயன்படுத்துகின்றனர். அதிக இரைச்சல் காரணமாக இதயநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஆடிமாதத்தை முன்னிட்டு பழநி அடிவாரம் பகுதியில் பள்ளிகள் அருகே பெரிய ஸ்பீக்கர்கள் மூலம் நாள் முழுவதும் பாடல்கள் ஒலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், ஆசிரியர்கள் சொல்வதை கேட்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். எனவே, காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்பகுதியில் ஒலிபெருக்கி வைக்க போலீசார் தடை விதிக்க வேண்டும்.எஸ்.பி., சக்திவேல் மாணவர்களின் நலன் கருதி அனுமதியின்றி வைக்கப்படும் ஒலிபெருக்கிகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.----------

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X