| அரசாணையின்படி சீர்மரபினருக்கு சான்றிதழ்; மாநில துணை பொது செயலாளர் கோரிக்கை Dinamalar
அரசாணையின்படி சீர்மரபினருக்கு சான்றிதழ்; மாநில துணை பொது செயலாளர் கோரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:56

நிலக்கோட்டை : தமிழக அரசின் புதிய அரசாணையின்படி 68 சமூகத்தினருக்கு 'டி.என்.டி (பழங்குடியினர்)' சாதிச் சான்று வழங்க வேண்டும் என சீர்மரபினர் நல சங்க மாநில துணை பொது செயலாளர் ஜோதிராஜா கூறினார்.நிலக்கோட்டையில் அவர் கூறியதாவது : தமிழகத்தில் 68 சமூகத்தினர் 1979 ஆம் ஆண்டுக்கு முன்பு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பிரிவில் இருந்தனர். பின் சீர்மரபினர் ஆக மாற்றப்பட்டதால் கல்வி வேலைவாய்ப்பில் உரிமை பறி போனது. மீண்டும் தங்களுக்கு டி.என்.டி., சான்றிதழ் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.இது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 2014 தேசிய சீர்மரபினர் நாடோடிகள் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆணைய தலைவர் ராஞ்சி நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களிடம் கருத்து கேட்டறிந்தார். மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அவர்களுக்கு 'டி.என்.டி.,' சான்றிதழ்கள் வழங்கலாம் என தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது.ஆனால், இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, 68 சமூகத்தினருக்கு 'டி.என்.டி.,' சான்றிதழ் வழங்க வேண்டும். சீர்மரபினர் நல வாரியத்தில் அடையாள அட்டை பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது. புதுப்பித்தலை அந்தந்த தாலுகா இ-சேவை மையங்களில் மாற்றிக்கொள்ள வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X