| நகைக்கடையில் திருடிய இருவர் கைது: விவசாய கூலியாக நடித்து திட்டம் Dinamalar
நகைக்கடையில் திருடிய இருவர் கைது: விவசாய கூலியாக நடித்து திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
00:58

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே நகைக்கடையை உடைத்து நகை திருடிய இரண்டு கொள்ளையர்கள் பிடிபட்டனர். தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.பொள்ளாச்சி நாகூரை சேர்ந்தவர் முகமது இலியாஸ், 46; வடக்கிபாளையத்தில், நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்றுள்ளார்.


நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் வடக்கிபாளையம் எஸ்.ஐ., செந்தில்வேல்பெருமாள் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, முகமது இலியாசின் கடை ஷட்டர் பாதி திறந்துள்ளது பார்த்து, அங்கு, செல்லும் போது, மூவர் வெளியில் ஓடி வந்து, ஸ்கூட்டரில் தப்பிச் சென்றுள்ளனர்.அவர்களை போலீசார் விரட்டிய போது, ஒருவர் நகையுடன் தப்பி ஓடி விட்டார்; இருவர் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம் பெரியபுத்துாரை சேர்ந்த மாதேஸ், 57, சிவராஜ், 50 என்பதும், தப்பி ஓடியவர் மாதேஸ் மகன் ராமசாமி, 27 என்பதும் தெரிய வந்தது.


பொள்ளாச்சி பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு நிலக்கடலை அறுவடை பணிக்காக வந்த போது, நோட்டமிட்டு வைத்து, இப்போது வந்து திருடியதும் தெரிய வந்தது.கடையின் முன்பிருந்த கேமராவை உடைத்து, ஷட்டரை நெம்பி திறந்து உள்ளே சென்று திருடியுள்ளனர். கடை பாதுகாப்பு லாக்கரை, 'கட்டிங்' இயந்திரம் பயன்படுத்தி திறக்க முயற்சித்துள்ளனர். அதற்கான மின்சாரத்தை கடையில் இருந்தே எடுத்துள்ளனர். கடையில் இருந்து மூன்று பவுன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளியை திருடியுள்ளனர். முக்கிய நகைகள் வைக்கும் லாக்கரை உடைக்கும் முன்பு சென்றதால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X