| சரக்கு வாகனங்களில் 'பேட்டரி' திருட்டு: நூதன கும்பலை சேர்ந்தவர்கள் கைது Dinamalar
சரக்கு வாகனங்களில் 'பேட்டரி' திருட்டு: நூதன கும்பலை சேர்ந்தவர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:08

ஆனைமலை:பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட லாரி, சரக்கு வாகனங்களில் 'பேட்டரிகள்' திருடிய கும்பலில், இருவரை ஆழியாறு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அங்கலக்குறிச்சி மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துமணி, 48; லாரி டிரைவர்.


இவரது லாரியில் நேற்று முன்தினம் 'பேட்டரி' திருடப்பட்டதாக, ஆழியாறு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, நா.மூ.சுங்கம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த, இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், ஜமீன்ஊத்துக்குளி செல்லமுத்து நகரை சேர்ந்த கார் டிரைவர் ஆதம் இப்ராஹிம், 28, மற்றும் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் விற்பனையாளராக பணியாற்றும் யுகேஸ்வரன், 24, என்பதும் தெரியவந்தது. இவர்கள் நான்கு இளைஞர்களுடன் இணைந்து கூட்டாக, பல்வேறு லாரி, சரக்கு வாகனங்களில் 'பேட்டரி', 'ஜாக்கி' திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, திருடுவதற்கு பயன்படுத்திய கார் மற்றும், 20 பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.


போலீசார் கூறியதாவது:கோட்டாம்பட்டி, தொழிற்பேட்டை, அங்கலக்குறிச்சி, மீனாட்சிபுரம் என பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் இந்த கும்பல், 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 'பேட்டரிகள்' திருடி உள்ளனர். இக்கும்பல், தனியாக நிற்கும் லாரி, சரக்கு வாகனங்களை நோட்டமிட்டு, பைக்கில் சென்று, 'பேட்டரியை' திருடி ஒரு இடத்தில் வைத்து விடுவார்கள்.அதன்பின், ஆதம் இப்ராஹிம் தனது காரில் அந்த 'பேட்டரியை' எடுத்துச் சென்று, விற்பனை செய்து வந்துள்ளனர். இவ்வாறு, தெரிவித்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பேரிடம் பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X