| தென்னங் கள் விற்றவர்கள் கைது Dinamalar
தென்னங் கள் விற்றவர்கள் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:09

கிணத்துக்கடவு:நெகமம் அருகே கள் விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்து, 15 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.நெகமம் அடுத்துள்ள காணியாலாம்பாளையத்தை சேர்ந்த பூபதி, 45, ரத்தினசாமி, 57, ராமசாமி, 59 ஆகியோர் தோட்டங்களில் உள்ள தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நெகமம் எஸ்.ஐ., மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, கள் விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா ஐந்து லிட்டர் வீதம் மொத்தம், 15 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X