| வேளாண் அலுவலக கட்டடம் பழுது இடுபொருட்கள் நனையும் அவலம் Dinamalar
வேளாண் அலுவலக கட்டடம் பழுது இடுபொருட்கள் நனையும் அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:47

மங்கலம்பேட்டை: இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தைஇடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை வேளாண் விரவாக்க மையத்தின் மூலம் சின்னவடவாடி, பெரியவடவாடி, எருமனுார், விஜயமாநகரம், புலியூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், உயிர் உரங்கள்,நெல், வேர்க்கடலை, உளுந்து விதைகள், சிறு தானியங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வேளாண் விரிவாக்க மையகட்டடம் கடந்த40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால்,தற்போது கட்டடம் சேதமடைந்து, மேல் தளத்தில் இருந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. நாளுக்கு நாள் கட்டடம் வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.இதனால், இங்கு பணிபுரியும் வேளாண் அதிகாரிகள், ஊழியர்கள் அச்சமடைகின்றனர்.கட்டடத்தில் ஆங்காங்கேவிரிசல்ஏற்பட்டுள்ளதால், மழைக் காலங்களில் உள்ளே வைக்கப்பட்டுள்ள விதைகள் நனைந்துவீணாகிறது.எனவே, சேதமடைந்துள்ள கட்டடத்தை, இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X