கடலூர் - மடப்பட்டு 4 வழி சாலைக்கு விரைவில் நிலம் ஆர்ஜிதம்! இப்பணிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 630 கோடி ஒதுக்கீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஜூலை
2019
12:39
பதிவு செய்த நாள்
ஜூலை 22,2019 01:48

கடலுார்: கடலுார் - மடப்பட்டு நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காகவிரைவில் நில ஆர்ஜிதம்செய்யும் பணி துவங்க உள்ளது.


தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அடைவதற்காக விழுப்புரம் - திருச்சி - சென்னை போன்ற பெரியநகரங்கள், துறைமுகங்கள், சிப்காட் போன்றவற்றை இணைக்கும் விதமாகசென்னை - கன்னியாகுமரி தொழில் தட சாலை திட்டம் அமைக்க மத்திய அரசுஅனுமதியளித்துள்ளது.அதன்படி கடலுாரில் இருந்து விழுப்புரம் - திருச்சி தேசிய சாலையில் இணைக்கும் விதமாக 4வழி சாலை அமைக்கப்படவுள்ளது.


இத்திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 630 கோடிரூபாய் கடன் வழங்குகிறது.இந்த சாலை கடலுார், நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், ரயில்வே கேட் வலதுபுறம், கனிசபாக்கம், அம்மாபேட்டை, அங்குச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களைக் கடந்து மடப்பட்டு செல்கிறது.இதற்கிடையே பணப்பாக்கம் கிராமத்தில் ரயில்வே மேம்பாலமும், சேந்தநாடு கிராமத்தில் உள்ள கல்வெட்டு பாலம் அகலப்படுத்தவும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.


கடலுாரில் இருந்து மடப்பட்டு வரை 38 கி.மீ., துாரத்திற்கு இந்த சாலை

அமைக்கப்படவுள்ளது. இதில் நெல்லிக்குப்பம், பட்டாம்பாக்கம், பண்ருட்டி ஆகிய ஊர்களுக்கு அப்பால் வடக்குப்புறமாக புற வழிச்சாலை அமைக்கப்படும்.அதைத்தொடர்ந்து பண்ருட்டி ரயில்வே கேட்டில் இருந்து வலதுப்புறப்பாக செல்லும் சாலைவி.கே.டி., சாலையை கடந்து கனிசபாக்கம், அம்மாப்பேட்டை வழியாக மடப்பட்டு செல்லும்வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த திட்டத்தை நிறைவேற்ற நில ஆர்ஜிதம்செய்வதற்காக வருவாய்த்துறையில் இருந்து தாசில்தார், சர்வேயர் மற்றும் பணியாளர்கள்நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.


இந்த சாலைக்காக ஏரியல் சர்வே, விரிவான திட்ட மதிப்பீடு, பண்ருட்டி வரை நிலம் அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன.மேலும் பண்ருட்டி வரை நில ஆர்ஜிதம் செய்யும் பகுதிகளில் மக்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நெல்லிக்குப்பம் நகரின் பின்புறம் செல்லும் புற வழிச்சாலையால் வீடுகள் அடிபடுவதாக கருதி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதற்காக கடலுார் சப் கலெக்டர் தலைமையில் சமரச கூட்டம் நடத்தப்பட்டது.இருப்பினும் அப்பகுதி மக்கள் சமாதானம் அடையவில்லை. அதன் காரணமாக கலெக்டர்அன்புச்செல்வம் தலைமையிலான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முயற்சிமேற்கொண்டு வருகின்றனர்.இது ஆசிய வளர்ச்சி வங்கி திட்டம் என்பதால்


இத்திட்டத்தினால் பாதிக்கப்படுவோர்கள் அனைவருக்கும் மறுவாழ்வு மற்றும் இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிகிறது. கடலுார் - மடப்பட்டு 4 வழி சாலை அமைக்கப்பட்டால் குறைந்தபட்சம் 100 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் பயனிக்க முடியும். இதன் காரணமாக பயண நேரம் கடலுாரில் இருந்து மடப்பட்டு செல்ல 30 நிமிடம் வரை குறையும்.


 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kurinjikilan - Madurai,இந்தியா
22-ஜூலை-201921:16:14 IST Report Abuse
kurinjikilan இந்த போராளிகள் விவசாய நிலத்தை உபயோகப்படுத்தக்கூடாது என்று கொக்கரிப்பார்கள்.. சுடலை, குருமா, சைக்கோ, சைமன் போன்றோரும் மீட்டிங் போட்டு மோடியை ஏசுவார்கள்..ஆனால் அதே விளை நிலத்தை பிளாட் போட்டு விற்பார்கள்..அதிலும் திமுக தான் முண்ணனியில் இருக்கும்..திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகம் என்றைக்கு மீளப்போகிறதோ தெரியலை..
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
22-ஜூலை-201912:24:45 IST Report Abuse
mukundan எங்களுக்கு சாலைகள் வேண்டாம், மண்ணு ரோடு போதும். அதிலும் நாங்க தேவைப்பட்டால் நெல் அறுவடை செய்து விவசாயத்தை மேம்படுத்துவோம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X