விருத்தாசலம்: விருத்தாசலம், பூதாமூர் செங்கழனிமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.விருத்தாசலம், செங்கழனி மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதையடுத்து, பூதாமூர் மணிமுக்தாற்றில் புனித நீர் மற்றும் பூங்கரகம் எடுத்து வந்து, கொடியேற்றும் வைபவத்துடன், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.கோவில் அறங்காவலர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.தொடர்ந்து, தினசரி அபிேஷக ஆராதனை நடக்கிறது.26 ம் தேதி விளக்கு பூஜை, 2.8.2019 அன்று பால்குடம் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது.3ம் தேதி சாகை வார்த்தல், 4ம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.