கடலுார்: முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின்குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், கடலுாரில் நாளை நடக்கிறது.கலெக்டர் அன்புச்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட முன்னாள் படைவீரர் அவரது குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில்பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் வேலைவாய்ப்பு கருத்தரங்கு நாளை (23ம் தேதி)மாலை 5 மணிக்கு மக்கள் குறைதீர்வு நாள்கூட்ட அரங்கில் நடக்கிறது.முன்னாள் படைவீரர்கள் சுய தொழில் செய்திட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்கில்பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை மூலம் வழங்கப்படும் பயிற்சிமற்றும் சலுகைகள் குறித்து விளக்குகின்றனர்.கடலுார் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள்படைவீரர், அவரது குடும்பத்தினர் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவர்களை சார்ந்தோர் தங்களது கோரிக்கையினை மனுவாக கலெக்டரிடம் நேரில்சமர்ப்பிக்கலாம்.மனு அளிக்க விரும்புவோர் மனுவின் இரு பிரதிகளைஅடையாள அட்டை நகலுடன் அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.