| கோவில் சுவரில் வேன் மோதி 4 பேர் காயம் Dinamalar
கோவில் சுவரில் வேன் மோதி 4 பேர் காயம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
01:50

சேத்தியாத்தோப்பு: சேத்தியாதோப்பில் தீப்பாய்ந்தநாச்சியார் கோவில் சுவரில் வேன் மோதி நான்கு பேர் காயமடைந்தனர்.பண்ருட்டியை சேர்ந்தவர் 16 பேர் நேற்று தஞ்சாவூரில் நடந்த உறவினர் திருமணத்திற்கு வேனில் சென்றனர். பின், வேனில் திரும்பியுள்ளனர். புதுப்பேட்டையைச் சேர்ந்த காதர்பாஷா மகன் அலிஅகமது, 42, வேனை ஓட்டி வந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி தீப்பாய்ந்த நாச்சியார் கோவில் அருகே மாலை 5 மணியளவில் வேன் வந்தபோது, கட்டுப்பாட்டுபாட்டை இழந்து கோவில் சுவர் மீது மோதி, பள்ளத்தில் இறங்கியது.வேனில் பயணம் செய்த பண்ருட்டியை சேர்ந்த ஜானிபாஷா, 80, அவரது மனைவி ஜமிலா, 75, அகமது, அலி அகமது ஆகியோர் காயமடைந்தனர்.அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துகுறித்து சேத்தியாதோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X