| எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை Dinamalar
எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:06

கோவை:களம் இலக்கிய அமைப்பு சார்பில், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் படைப்புகள் குறித்த, திறனாய்வு கருத்தரங்கம், சலீவன் வீதியில் உள்ள மாரண்ண கவுடர் பள்ளி அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, எழுத்தாளர் நடராஜன் தலைமை வகித்தார்.இதில், எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பேசியதாவது: இந்த சமூத்தின் மீது உள்ள, கசப்புகளைதான் என் கதைகளில் வெளிப்படுத்துகிறேன். தமிழகத்தை பொறுத்தவரை நல்ல விஷயங்கள் அதிகம் நடப்பதில்லை. இங்கு எழுத்தாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை.ஒரு எழுத்தாளன் தாக்கப்பட்டால், அதை கேலியும், கிண்டலும் செய்யும் வக்கிர எண்ணம் கொண்டவர்கள்தான் அதிகம். ஒரு படைப்பாளி குறித்த விமர்சனம் என்பது, அவரது படைப்பு சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அவரது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்ததாக இருக்கக் கூடாது.சமீபத்தில் சிகாகோவில் நடந்த, 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து ஒரு நவீன எழுத்தாளரை கூட அழைக்கவில்லை. தமிழக அரசு சார்பில், நிர்மலா பெரியசாமி, பா.வளர்மதி போன்றவர்கள்தான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.இவர்களுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?நவீன இலக்கியம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள், ஆட்சி அதிகாரத்துக்கு வருகின்றனர். இதுதான் தமிழின் இன்றைய பரிதாப நிலை. இவ்வாறு, அவர் பேசினார்.எழுத்தாளர்கள் சு.வேணுகோபால், அன்பரசு அகிலா, சோதிமணி ஆறுமுகம், செந்தாமரை, அறிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சமீபத்தில் சிகாகோவில் நடந்த, 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து ஒரு நவீன எழுத்தாளரை கூட அழைக்கவில்லை. தமிழக அரசு சார்பில், நிர்மலா பெரியசாமி, பா.வளர்மதி போன்றவர்கள்தான், இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கும் தமிழ் இலக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?நாஞ்சில் நாடன்எழுத்தாளர்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X