| தபால்துறையின் உதவித்தொகை திட்டம் Dinamalar
தபால்துறையின் உதவித்தொகை திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:08

கோவை:தபால்துறையின் 'தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, வரும் 26ம் தேதிக்குள், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இந்திய தபால்துறை சார்பில், அரிய தபால் தலை சேகரிப்பை மாணவர்களிடையே ஊக்குவிக்கும் வகையில், 'தீன்தயாள் ஸ்பார்ஷ் யோஜனா' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்கு, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில், 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விபரங்களுக்கு, கோவை தலைமை தபால்நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X