| ரசிகர்களை சிரிக்க வைத்த 'காமெடி தர்பார்' Dinamalar
ரசிகர்களை சிரிக்க வைத்த 'காமெடி தர்பார்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:08

கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில், நடிகர் எஸ்.வி.சேகரின் 'காமெடி தர்பார்' மற்றும் 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' என்ற இரண்டு நாடகங்கள், இரண்டு காட்சிகளாக நடத்தப்பட்டன.மாலை, 4:00 மணிக்கு துவங்கிய, 'காமெடி தர்பார்' நாடகம், எஸ்.வி.சேகரின் பல நாடங்களின், சிறந்த நகைச்சுவை காட்சிகளின் தொகுப்பாக இருந்ததால், அரங்கத்தில் சிரிப்பொலி அடங்கவில்லை. ஒவ்வொரு நிமிடமும், சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்தன.இரவு 7:00 மணிக்கு துவங்கிய, 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்'என்ற இந்த நாடகம், 1978ல் கிரேஸி மோகன் எழுதியது. தமிழகம் முழுவதும், பல சபாக்களில் இந்த நாடகம் பல காட்சிகள் நடத்தப்பட்டு, நாடக ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற நாடகமாகும்.42 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது, மீண்டும் அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாடகம் முழுவதும் ரசிகர்களை மெய் மறந்து, சிரிக்க வைக்கிறார் எஸ்.வி.சேகர். நாளை மாலை, பொள்ளாச்சியில் இதே நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.'ரசனை குறையவில்லை'''இதுவரை, 25 நாடகங்களில் நடித்து இருக்கிறேன். 6500 காட்சிகள் அரங்கேற்றப்பட்டுள்ளன. இப்போது மறுபடியும் இந்த நாடகங்களை, 20 காட்சிகள் நடத்தி இருக்கிறோம். இந்த நவீன காலத்தில் எத்தனையோ பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், கோவையில் 1000 பேர் என் நாடகத்தை பார்த்து ரசித்துள்ளனர். நாடகங்கள் மீதுள்ள மக்களுக்கு இருக்கும் ரசனை, எந்த காலத்திலும் மாறாது,'' என்றார் எஸ்.வி.சேகர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X