| 'இறைவனின் நாமம் சொன்னாலே முக்தி' Dinamalar
'இறைவனின் நாமம் சொன்னாலே முக்தி'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2019
02:10

கோவை:கோவை, ராம்நகர், ராமர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'பாடி மகிழ்வோம் பகவான் நாமம்' என்ற ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'பாடி மகிழ்வோம் பகவான் நாமம்' என்ற ஆன்மிக சொற்பொழிவு, ராம்நகர் ராமர்கோவிலில் நேற்று நடந்தது. இதில், ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ், இசையுடன் கூடிய ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.நேற்றைய நிகழ்ச்சியில், ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் பேசுகையில், ''கடுமையான யாகங்கள் செய்தால் மட்டுமே, இறைவனை அடையலாம் என அனைவரும் நினைத்து கொண்டுள்ளனர். இறைவனின் நாமம் சொன்னாலே, எளிதாக இறைவனை அடையலாம்.இறைவனுக்கு பணம் படைத்தவன், உயர்ந்த ஜாதி, வீரம் மிக்கவன், பலவான் போன்ற பாகுபாடெல்லாம் கிடையாது. முக்தியை அடைய, நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், முழுமனதுடன் இறைவனை அடைய வேண்டும்,'' என்றார்.இந்நிகழ்ச்சியில், ஏராளமான ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X